மும்பை:
கிண்டல் செய்தவர்களை வாயடைத்து போக செய்துள்ளார் நம்ம பாலிவுட் கதாநாயகி பிரியங்கா சோப்ரா. என்ன விஷயம்ன்னா?


இப்ப முழு நேர ஹாலிவுட் நடிகை மாதிரியே மாறிப் போய்விட்டார் பிரியங்கா. இவர் நடிச்ச குவாண்டிகோ டிவி தொடர் செமத்தியா நல்ல பெயரை சம்பாதித்து கொடுக்க... அடுத்து ஹாலிவுட் படத்தில் நடிக்கிறாராம். இதனால அமெரிக்காவாசியாகவே அவர் மாறி போய்விட்டார். 


அங்குள்ள சிலர் இந்திய சினிமாக்களை கிண்டல் செய்து வந்துள்ளனர். பொறுத்து பொறுத்து பார்த்த பிரியங்கா கடைசியில் பொங்கி எழுந்துவிட்டார். எப்படி தெரியுங்களா? இந்திய சினிமாவில் பாடல் காட்சிகளையும், நடனத்தையும் கிண்டல் செய்பவர்களே. அதில் நடிப்பது எவ்வளவு கடினம் என்று தெரியுமா? நடித்து பாருங்கள் தெரியும் என்று செம பிடி பிடித்துள்ளார். எங்கிருந்தாலும் பிறந்த நாட்டை விட்டு தராத பெண் சிங்கம்...


మరింత సమాచారం తెలుసుకోండి: