த்ரிஷா நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகியுள்ள 'நாயகி' திரைப்படம் தற்போது ரிலீஸ் தேதியை பெற்றுள்ளது. இதுகுறித்த செய்தியை நாம் இப்போது விரிவாக பார்க்கலாம். 


முதன் முறையாக இரண்டு வேடத்தில், த்ரிஷா நடித்துள்ள 'நாயகி' திரைப்படம், வரும் செப்டம்பர் 16-ந்தேதி திரையரங்கில், வெளிவருகிறது.அறிமுக இயக்குனர் கோவி இயக்கியுள்ள இந்த படத்தை த்ரிஷாவின் மேலாளர் கிரிதர் தயாரித்துள்ளார். 


இதில் த்ரிஷா முக்கிய ரோலில் நடித்துள்ளார். கணேஷ் வெங்கட்ராமன், சத்யம் ராஜேஷ், மனோபாலா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


மேலும் திகில் கதையை கொண்டு உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find out more: