விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் முதல் அதிரடி டீசர் நாளை செப்டம்பர் 21-ம் தேதி இணைய தளத்தில் முதல் வெளியாகிறது. இதற்கான ஒரு டிசைனை தயாரிப்பு நிறுவனம் முதலில் இன்று வெளியிட, கடும் குஷியான விஜய் ரசிகர்கள் அதை இன்று முழுக்க சமூக வலைத் தளங்களில் வேகமாக வைரலாக்கிவிட்டனர். இந்த டீசர் டிசைனில் விஜய் ஒரு ஜல்லிக்கட்டுக் காளையுடன் கம்பிரமாக நிற்கிறார்.

அவருக்குப் பக்கத்தில் கைக் குழந்தையுடன் அழகாய் அமர்ந்திருக்கிறார் நடிகை நித்யா மேனன்.

குடும்பப் பாங்கான, கிராமத்து அதிரடி ஆக்ஷன் படம் என்பதைச் தெளிவாய் சொல்கிறது இந்த டிசைன். இதுவரை வெளியான தனது எந்தப் படங்களிலும் இல்லாத அளவுக்கு கம்பீர தோற்றமாகவும் அழகாகவும் இந்தப் பட டிசைன்களில் காட்சி தருகிறார் விஜய். இது அவரது ரசிகர்களை மிக உற்சாகமடைய வைத்திருக்கிறது
click and follow Indiaherald WhatsApp channel