சென்னை:
சின்னத்திரை நடிகர்களின் கனவே வெள்ளித்திரையில் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்பதுதான். இதில் ராஜ்கமலும் ஒருவர்,.
பல கனவுகளோடு சின்னத்திரையில் அறிமுகமானவர் ராஜ்கமல். இவர் சீரியல்களை தொடர்ந்து தற்போது மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவருக்கு சினிமாவில் டார்க்கெட் பிரகாஷ்ராஜ் இடம்தானாம்.
இதுபற்றி அவர் கூறுகையில், செல்லத்தின் இடத்தைப் பிடிக்கணும், அவரைப் போன்று வில்லன் இமேஜ் வேண்டும் என்பதுதான் என் சினிமா பயணம். கேரக்டர் ரோல், கதையின் நாயகன் என்று எப்பொழுதும், என்னை முழுநேரமாக கேமரா முன்னாடி நிற்கணும்.
அதற்காக தினமும் வீட்டில் நடித்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். முயற்சியை கடந்த எட்டு வருடமாகக் கைவிடாமல் இருக்கிறேன் என்று சொல்லியிருக்கார். வாழ்த்துக்கள்... முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்...