விஷால் நடிக்கும் 'கத்தி சண்டை' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. சூரஜ் இயக்கும் இந்த படத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகபதி பாபு, தருண் அரோரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 


இந்த படத்தின் தமிழ் தலைப்பு 'கத்தி சண்டை' என்பதை நாம் அனைவரும் அறிந்தோம். இதையடுத்து தெலுங்குவிலும் வெளிவரவுள்ள இந்த படத்தின், தெலுங்கு டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. 


தெலுங்குவில் இந்த படத்திற்கு 'ஒகாடோசாடு' என்ற தலைப்பை, படக்குழுவினர் பரிசீலினை செய்துள்ளனர். மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இருமொழிகளிலும் வரும் அக்டோபர் 7-ந்தேதி, ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வெளிவரும் என தெரிகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: