அண்மையில் உலகநாயகன் கமல் ஹாசன்  தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தின் மாடி படியில் இருந்து தவறுதலாக கிழே விழுந்ததில், அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை நாம் அறிந்தோம். 


இதையடுத்து, தற்போது கமலின் ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி கமல் ஹாசன் நற்பணி இயக்கத்தை சேர்ந்தவர்கள், கமல ஹாசன் விரைவில் உடல்நலம் தேறி வர, வித்தியாசமாக ஒரு செயல் புரிந்துள்ளனர். 


அவர்கள் கிருஷ்ணகிரி ரயில் நிலையத்திற்கு, ஒரு சக்கர நாற்காலியை அன்பளிப்பாக நற்பணி இயக்கத்தின் சார்பில் அளித்துள்ளனர். ரயில் நிலையத்திற்கு வரும் மாற்று திறனாளிகளுக்கு, இந்த சக்கர நாற்காலி உதவிகரமாக இருக்கும் என்பதனால், அவர்கள் இதை செய்துள்ளனர். 


மேலும் கமல் ஹாசன் இன்னும் ஒரு மாதத்தில், பூரண குணமடைந்து 'சபாஷ் நாய்டு' படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிப்பார் என அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனராம்.



Find out more: