சென்னை:
தன் பேச்சு, செயல்களால் ரசிகர்களை மட்டுமின்றி இயக்குனர்களை கட்டி போட்டு வைத்துள்ளார் ஆர்ஜே. பாலாஜி. இப்போது இவரது கிராப் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஜிவ்வென்று எகிறி வருகிறது.  


தமிழ் சினிமாவில் தற்போது நிறைய காமெடி நடிகர்கள் வளர்ந்து வருகின்றனர். அதில் ஒருவர் ஆர்.ஜே. பாலாஜியை கண்டிப்பாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும். நானும் ரவுடித்தான் படத்திற்கு பிறகு இவருக்கு சினிமாவில் தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.


இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் மகேஷ் பாபு நடிக்க உள்ள புதிய படத்தில் இவர் புக் செய்யப்பட்டுள்ளாராம். 


இதையடுத்து முருகதாஸ், மகேஷ் பாபு படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது என்று பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். வாழ்த்துக்கள் ப்ரோ...


మరింత సమాచారం తెలుసుకోండి: