தேவி மகாலட்சுமியை நினைத்து, விரதமிருந்து வழிபடுவதே வரலட்சுமி விரதம். நம்முடைய நியாயமான கோரிக்கைகளை, வரலட்சுமி விரதமிருந்து தேவியிடம் சொன்னால், தேவி அருள்புரிவால் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 


வரலட்சுமி பூஜை செய்ய ஏற்ற நாள், ஆவணி மாத பெளர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை. ஏனெனில் அன்றுதான் மகாலட்சுமி அவதரித்த நாளாக கூறப்படுகிறது. 


சுமங்கலி பெண்கள் அனைவரும் வரலட்சுமி விரதத்தை கடைபிடித்து வந்தால், தங்கள் கணவரின் ஆயுள் நீடிக்கும். மேலும் செல்வ வளம் உயர்ந்து, வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். 


வரலட்சுமி விரதத்தன்று, ஒன்பது இழை நூல்களால் ஆன, ஒன்பது முடிச்சுக்கள் போடப்பட்ட, நோன்பு கயிறை பூஜையில் வைத்து வழிபட்டு அதை கழுத்தில் அல்லது கையில் கட்ட வேண்டும். மேலும் பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கும் இதை வழங்க வேண்டும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: