கடந்த ஆகஸ்ட் 19-ந்தேதி, 'தர்மதுரை' திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி, ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. 


இதன் வெற்றியை கொண்டாடி முடிப்பதற்குள், இந்த படத்தின் இயக்குனர் சீனு ராமஸ்வாமிக்கு தற்போது இன்னொரு பெரிய ஆபர் கிடைத்துள்ளது. அது என்னவென்றால்.... 


'தர்மதுரை' திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.கே சுரேஷ், இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்.  ஹிந்தியில் உருவாகவுள்ள இந்த படத்தை சீனு ராமஸ்வாமி தான் இயக்கனும் என்று அவர் திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். 


தமிழில் 'தென் மேற்கு பருவக்காற்று' திரைப்படம் இயக்கி அறிமுகமான சீனு ராமஸ்வாமி தற்போது முதன்முறையாக பாலிவுட் திரைப்படத்தை இயக்க போகிறார். மேலும் இவர், மறைந்த இயக்குனர் பாலு மகேந்திரனின் உதவியாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: