1982-ம் ஆண்டு விசு இயக்கி, நடித்த 'மணல் கயிறு' திரைப்படத்தில் எஸ்.வி.சேகர், சூர்ய கங்கா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று, வசூல் ரீதியாக சாதனை படைத்தது. 


இதையடுத்து தற்போது 'மணல்கயிறு - 2' உருவாகியுள்ளது. இந்த படத்தை 'யாருடா மகேஷ்' திரைப்பட இயக்குனர் மதன் குமார் இயக்கியுள்ளார். இதில் விசு, எஸ்.வி.சேகர், சூர்ய கங்கா, அஸ்வின், பூர்ணா உள்பட பலர் நடித்துள்ளனர்.


இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ள எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின், இந்த படத்தில் நடிப்பதற்காக கடுமையான உடற் பயிற்சி மேற்கொண்டு, 20 கிலோ உடல் எடை குறைத்துள்ளார். 


தன்னை ஸ்லிமாக்கி, இப்படத்தில் அவர் சிறப்பாக நடித்துள்ளாராம். அதனால் இந்த படத்திற்கு பிறகு அவருக்கு ஹீரோ சான்ஸ் அதிகமாக கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: