சென்னை:
படத்துக்கு முன்னாடியே ராஜ் டிவி சிறப்பு நிகழ்ச்சியை போட்டு அதகளம் செய்ய ஆரம்பிச்சுடுச்சு. எந்த படம் என்று தெரியுங்களா?


வேறு எந்த படம். கபாலி சிறப்பு நிகழ்ச்சிதானாம். கபாலி படம் வரும் 22ம் தேதி வெளியாகுதுன்னு அறிவிச்சுட்டாங்க. இதுல இன்னொரு விஷயம் என்னன்னா? ராஜ் டிவி கபாலி பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை ஆரம்பிச்சுடுச்சு. கடந்த 10ம் தேதி கபாலி பட விஷயங்கள் ஒளிபரப்பானது.


அடுத்து வரும் 17, 24 தேதிகளிலும் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.


இதில் கபாலி தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் ரஞ்சித், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர் என்று வரிசையாக கபாலி படத்து டீம்மோடு அவர்களின் கபாலி பற்றிய ஒர்க்கை சிறப்பு நிகழ்ச்சியாக்குது ராஜ் டிவி. அப்போ அதகளம் ஸ்டார்ட் ஆகிடுச்சுன்னுதானே அர்த்தம். 



మరింత సమాచారం తెలుసుకోండి: