வரதீஸ்வர் கோவில், திருச்சிராப்பள்ளியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில், 12 கிலோ மீட்டர் தொலைவில், திருப்பாச்சிலாச்சிராமம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வரதீஸ்வரர் வீற்றிருப்பார். 


இத்தளத்தில், அருள் வழங்கும் பாலாம்பிகை உள்ளார். பக்தர்கள் 3 ஞாயிற்று கிழமைகளில் தொடர்ந்து பாலாம்பிகைக்கு, பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு செய்து வருவதனால், நோய் நொடிகள் அண்டாது, திருமணத் தடை இருப்பவர்களுக்கு சுபமுகூர்த்தம் கைகூடும். 


மேலும், திங்கட் கிழமைகளில், இலுப்பை  எண்ணெயில் தீபங்கள் ஏற்றி, மாற்றுரைவரதீஸ்வரரை வழிபட்டால், வலிப்பு நோய் குணமடையும் என்பதை சிலர் உறுதியாக கூறுகின்றனர். 


நோய் தீர்க்கும் சக்தியை கொண்ட இத்தளம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: