சமுத்திரக்கனி இயக்கி நடித்த 'அப்பா' திரைப்படம் தற்போது 100 நாட்கள் கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகின்றது. இதையடுத்து அவர் நடிப்பில் 'கொளஞ்சி', 'சட்டம்' உள்ளிட்ட திரைப்படங்கள் வெளிவரவுள்ளன.


இந்நிலையில் அவர் தற்போது 'ஆண் தெய்வம்' என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை 'ரெட்டை சுழி' திரைப்படத்தை இயக்கிய தாமிரா இயக்கவுள்ளார். இதில் ஹீரோயினாக 'ஜோக்கர்' திரைப்படத்தில் நடித்த ரம்யா பாண்டியன் நடிக்கவுள்ளார். 


மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவாற்றும் பணிகளை விஜய் மில்டன் மேற்கொள்ளவுள்ளார். ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். சென்னையை மையப்படுத்தி, குடும்பப்பாங்கான திரைப்படமாக இப்படம் உருவாக்கவுள்ளது.
 



మరింత సమాచారం తెలుసుకోండి: