சென்னை:
இவரா முன்னாள் கதாநாயகியா... அட பொய் சொல்லாதீங்கப்பான்னு சொல்றது மாதிரி இன்னைக்கு புது கதாநாயகி போல பளிச்சுன்னு இருக்கார் நதியா... 40 பிளஸ் வயசுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க... இவரு என்ன சொன்னார் தெரியுங்களா?


திருமணத்துக்கு பிறகு ஜெயம் ரவியோட அம்மாவா மீண்டும் சினிமாவில 2004லில் என்ட்ரி கொடுத்த நதியாவுக்கு தொடர்ந்து அதுபோலவே அம்மா வேடங்களே வந்து குவிந்தன. சலித்து போன அவர் தன்வயதுக்கேற்ற முக்கியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பிச்சார். அவரோட இந்த ரீ என்ட்ரிக்கு அவரது கணவர்தான் காரணமாம். 


"உனக்கு 40 வயசானது மாதிரியே தெரியலை. குழந்தைகளும்தா நல்லா வளர்ந்துவிட்டாங்க. உனக்கு நடிக்கணும்னு ஆசை இருந்தா நடின்னு" கணவர்கி கொடுத்த ஊக்கம்தான் அவரை மீண்டும் நடிக்க வைத்ததாம். தமிழ் படங்களில் தொடர்ந்து அம்மா வேஷமே வந்ததால் தெலுங்கு பக்கம் பார்வையை திருப்பி அங்கேயும் வெளுத்துக்கட்டினார். 


இப்ப அவருக்காகவே முக்கிய ரோல் உருவாக்கப்படுதாம். இதனால் ரொம்ப சந்தோஷமா இருக்காராம். தெலுங்கில் இவர் நடித்துள்ள அ..ஆ.. படம் பெரிய திருப்பத்தை தரும்னு எதிர்பார்த்திருக்காராம். ஜெயிங்க மேடம்... 


మరింత సమాచారం తెలుసుకోండి: