சென்னை:
இவர் கூட வேலை பார்த்தாச்சு... ஆனா அவருடன் வேலை பார்க்கதான் ஆசை என்று சொல்லியிருக்கார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். 


விஷயம் என்னன்னா? விஜய் நடிப்பில் பிரமாண்ட வெற்றி அடைந்த துப்பாக்கி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தது சந்தோஷ் சிவன். இவரிடம் டுவிட்டரில் ரசிகர் ஒருவர், விஜய்-61க்கு நீங்கள் ஒளிப்பதிவு செய்கிறீர்களா? என்று கேள்வி கேட்டு இருந்தார்.


அதற்கு அவர் ‘விஜய்யுடன் பணிபுரிந்துவிட்டேன், அவருடன் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் பணிபுரியலாம். ஆனால், தற்போது ரஜினியுடன் இணைந்து மீண்டும் பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்’ என்று சொல்லியிருக்கார்.... சொல்லியிருக்கார்...


మరింత సమాచారం తెలుసుకోండి: