சீனா:
வளைத்து வளைத்து கடித்தது... 2 மணி நேரத்தில் 20 பேர் கடி வாங்க... போலீசார் சுட்டு கொன்றனர். இந்த சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் நாய் ஒன்று சாலையில் செல்பவர்களை விரட்டி விரட்டி கடித்தது. இப்படி 2 மணி நேரத்தில் 20 பேரை கடித்து குதறிய அந்த நாயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சீனாவில் குய்சவ் மாகாணத்தில் பொதுமக்கள் அதிகளவில் நடமாட்டம் இருக்கு சந்தை பகுதியில் திடீரென்று நாய் ஒன்று நுழைந்தது. இது கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடிக்க ஆரம்பிக்கவே மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
வெறி பிடித்த இந்த நாய் 2 மணி நேரம் 20 பேரை கடித்து காயப்படுத்தியது. இதுகுறித்து போலீசாருக்கு புகார் பறக்க விரைந்து வந்த அவர்கள் அந்த நாயை சுட்டுத்தள்ளினர். அதில் அந்த நாய் உயிரிழந்தது. திடீரென்று அந்த நாய்க்கு எப்படி வெறி பிடித்தது என்பது தெரியாத நிலை உள்ளது.