ரஜினியின் சமீபத்திய படங்களில் தென்னிந்திய நடிகைகளுடன் விட இந்திய நடிகைகளே அதிக முக்கியத்துவம் பெற்று ஜோடியாக நடித்து வருகிறார்கள். 'எந்திரன்' படத்தில் ஐஸ்வர்யா ராய், 'கோச்சடையான்' படத்தில் தீபிகா படுகோனே, 'லிங்கா' படத்தில் சோனாக்ஷி சின்ஹா, 'கபாலி' படத்தில் ராதிகா ஆப்தே. அதே வரிசையில் 'காலா' படத்தில் ஹுமா குரேஷி.

'காலா' படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் வெற்றிகரமாக நடந்தது. அதன் பின் சிறிய இடைவெளி விட்டு மீண்டும் இப்போ மும்பையில் நடத்தினார்கள். இப்போது சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது. இதற்காக மிகப் பெரிய அரங்கம் ஒன்றை இதற்கென்றே உருவாக்கியிருக்கிறார்கள். அங்கு ஒரு மாத காலத்திற்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்று பேசப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் - ஹுமா குரேஷி சம்பந்தப்பட்ட பல காட்சிகள் படமாக உள்ளதாகத் தெரிகிறது. ஹுமா குரேஷி, சென்னையில் உள்ள மிகப் பெரும் பிரபல ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து தினமும் படப்பிடிப்பிற்குச் பாதுகாப்புடன் சென்று வருகிறார்.

ஹுமா குரேஷி வயதான ரஜினி கதாபாத்திரத்திற்கு ஜோடி இல்லை என்று மட்டும் தெரிகிறது. 'கபாலி' படம் போலவே 'காலா' படத்திலும் ரஜினிகாந்த் இளமையான துடுக்கான தோற்றத்திலும் நடிக்கிறார், அந்த ரஜினிக்குத்தான் ஹுமா குரேஷி ஜோடியாக நடிக்கிறார் என்று செய்திகள் வருகிறது.
click and follow Indiaherald WhatsApp channel