நடிகை ஓவியா, தனியார் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் கலந்து கொண்டார்... இப்போது அவருக்கு லட்சங்காளையும் தாண்டி கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாகி விட்டனர். அதுமட்டுமல்ல, ஓவியா ரசிகர்கள், ஓவியா ஆர்மி என்ற பெயரில் ஓவியாவுக்காகவே ஓர் தனி அமைப்பையும் உருவாக்கி அதில் தங்களை இணைத்துக்கொண்டு, ஓவியாவுக்கு தொடர்ந்து தங்களுடைய மனமார்ந்த ஆதரவைக் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று திடீரென ஆரவ் மீது இவர் வைத்திருந்த காதலை மாற்றிக் கொள்வது போல்... "நான் சிங்கள்... சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்" என்று ஒரு பதிவை ட்விட்டர் பக்கத்தில் அதிரடியாக போட்டிருந்தார்.

இவரின் இந்த ட்விட்டருக்கு ரசிகர்கள் பலர் தங்கள் மனமார்ந்த ஆதரவைத் தெரிவித்திருந்தனர். சிலர் இப்போது தான் நல்ல முடிவை எடுத்திருக்கீறீர்கள் என கூறி ஓவியாவிற்கு தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

தற்போது ஓவியாவின் இந்தக் கருத்து குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் கதிர், "ஓவியா மாஸ் செக்டருக்குள் நுழைத்துவிட்டார்" எனக் கூறி ஓவியாவின் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.
கதிர் ஓவியாவுடன், மதயானைக்கூட்டம் படத்தில் அறிமுகம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
click and follow Indiaherald WhatsApp channel