SNS MOVIES பட நிறுவனம் சார்பில் கொளசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகு நாட்களுக்குப் பிறகு  இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பது தான். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். நேற்று இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடையாரில் மிகப்பிரம்மாண்டமாக நடந்ததுடன் அதில் வெளியிடப்பட்டது. விழாவில் இசை ஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா, நாயகன் விஜய் ஆண்டனி, ராதாரவி,படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, T. சிவா ,படத்தின் நாயகி ரம்யா நம்பீசன், ரோபோ சங்கர், மதுமிதா, மற்றும் பா.ஜ.க கட்சியின் முக்கிய பிரமுகர்களான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இயக்குநர் *பாரதிராஜா* பேசியதாவது,

 

"பெயரிலே பொன்னை வைத்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், விஜய் ஆண்ட்னி, சிவா அனைவருக்கும் வணக்கம். சிவா நல்ல படம் எடுக்கணும். என்று நினைப்பவர். விஜய் ஆண்டனி ஒரு ஆச்சர்யமான முகம். ரொம்ப சாதாரணமா இருப்பார். ஆனால் படத்தில் வேறமாதிரி இருக்கிறார். நல்ல இசை அமைப்பாளர் இப்போது நல்ல நடிகர். தமிழரசன் என்ற பெயர் ரொம்ப நல்லாயிருக்கு. இளையராஜாவை மிஞ்சுவதற்கு இனி ஒரு இசை அமைப்பாளர் பிறந்து வந்தாலும் முடியாது. படத்தை ஒன்றுமே இல்லாமல் எடுத்துக் கொடுத்தாலும் அந்தப்படத்திற்கு உயிர் கொடுத்து விடுவார் இளையராஜா..பேசாத படத்தை பேச வைத்தவர் இளையராஜா. அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் இசைக்கு ஈடு இணையில்லை. இந்த இயக்குநரை சிவா தேர்ந்தெடுக்கிறார் என்றால் நிச்சயம் பாபு யோகேஸ்வரன் நல்ல இயக்குநராகத் தான் இருப்பான். இனி வரும் இளைஞர்கள் கொஞ்சம் வயலன்ஸ் இல்லாமல் படமெடுங்கள். இது நல்லபடம். சிவா மனசிற்கு இந்தப்படம் பெரிய வெற்றியை அடையும்" என்றார்

 

முன்னாள் மத்திய அமைச்சர்.*பொன்.ராதாகிருஷ்ணன்* பேசியதாவது

 

"தமிழரசனின் வெற்றிக்காக உழைத்தவர்களை எதிர்காலத்தில் இதற்கு நிகரான ஒரு படம் என்பது போன்ற வாழ்த்துக்களைச் சொன்னவர்களை வணங்குகிறேன். பாரதிராஜா இளையராஜாப் பற்றி பேசும் போது இதற்கு மேல் யாராலும் இளையராஜாவை புகழ முடியாது என்று நினைத்தேன். இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும். தயாரிப்பாளர் சிவா ஒரு வேலையை எடுத்தால் அதை மிகச்சிறப்பாக முடிக்கக் கூடியவர். அவருடைய துணைவியாரும் இப்படத்தை தயாரித்து இருக்கிறார்கள். திரைத்துறையில் இருக்கும் சில பிரச்சனைகளை சிலர் குறிப்பிட்டார்கள். நிச்சயமாக இது குறித்து உரிய அமைச்சர்களிடம் பேசுவோம். அதன் மூலம் உங்களோட இருப்போம் என்று சொல்லிக்கொள்கிறேன்..எங்களோடு இணைந்து பயணிக்கும் திரையுலகினரை அன்போடு வரவேற்று வாழ்த்துகிறேன். இந்தப்படம் மிகச்சிறந்த திரைப்படம் என்ற உச்சத்தை தொட வேண்டும். என்று வாழ்த்துகிறேன். உங்களுக்கு இறைவன் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு. விஜய் ஆண்டனி எங்கள் ஊர்க்காரர். எங்கள் ஊர்க்காரரில் நடிகர்களில் யாரும் பெரிதாக வரவில்லை. விஜய் ஆண்டனி மிகப்பெரிய நடிகராக அடையாளம் காண   வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்றார்

 

మరింత సమాచారం తెలుసుకోండి: