நடிகை த்ரிஷா நடித்த மோஹினி படம் பல மாதங்களாக திரைக்கு வர தயாராக இருந்தும் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் த்ரிஷா நடித்து முடித்த இன்னொரு படமான தொண்ணூற்றி ஆறு படத்தின் டீசர் நேற்று வெளியானது. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் கேமராமேனான பிரேம் குமார் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ள இந்த படத்தில் த்ரிஷாவின் ஜோடியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.



இந்த படத்தின் டீசர் மூலம் இந்த படத்தில் பிரிந்த காதலர்களாக வரும் விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் பல ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்து கொள்ளும்போது ஏற்படும் சம்பவங்கள் தான் படத்தின் கதை என்று தெரிய வருகிறது. இந்த படத்தின் டீசரில் த்ரிஷா மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.



மேலும் பல ரசிகர்களும் த்ரிஷா அப்படியே மவுனம் பேசியதே படத்தில் பார்த்ததை போலவே இன்னும் அழகாக இருப்பதாக கூறியுள்ளனர். இந்த படத்தின் டீசரில் வந்த சிறு பாடலான காதலே காதலே பாடல் மிக சீக்கிரமாகவே பலரின் ரிங்க்டோனாக மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: