நடிகர் கதிர் மதயானை கூட்டம், கிருமி போன்ற படங்களின் மூலமாக திரைத்துறையில் நுழைந்தார். இதனை அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் தம்பியாக விக்ரம் வேதா படத்தில் புள்ளி என்ற வேடத்தில் நடித்து மீண்டும் கவனம் ஈர்த்தார்.

Image result for pariyerum perumal

சமீபத்தில் வெளியான மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான, பா.ரஞ்சித் தயாரிப்பான பரியேறும் பெருமாள் படம் பயங்கர ஹிட் ஆனது. இந்த படத்தை தொடர்ந்து கதிரின் அடுத்த படமாக வெளியாக இருப்பது, நீண்ட காலமாக வெளியாகாமல் காத்திருக்கும் சிகை படமாகும். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜெகதீசன் சுப்பு இயக்கியுள்ளார்.

Image result for pariyerum perumal

கதிர் இந்த படத்தில் பெண்தன்மை கலந்த ஒரு வேடத்தில் நடித்திருந்த, இந்த படத்தின் டீசர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்றுள்ள சி நிறுவனம், தனது சி 5 (Zee5 ) ஆப்பில் பொங்கல் அன்று வெளியிட உள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: