புதுடில்லி:
என்னன்னு சொல்லாமலே "கல்தா" கொடுத்தா எப்படிங்க... நொந்து போய் நூடுல்ஸ் சாப்பிட போயிட்டா என்ன செய்வது. என்ன தலையும் புரியலை வாலும் தெரியலையா... விஷயமே அப்படிதாங்க இருக்கு.
ஆம்ஆத்மி.. ஆம் ஆத்மின்னு ஒரு கட்சி இருக்குல்ல. டில்லியில அந்த கட்சிதான் ஆட்சியில் இருக்கு. காலையில் தினமும் கண்விழிப்பதே பிரச்னையின் முகத்தில்தான். காரணம் மத்திய அரசோட ஏற்படுத்திக்கிட்ட முட்டல், மோதல்தான்.
இப்ப இந்த கட்சி செய்தி தொடர்பாளரைதான் காரணம் சொல்லாம பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட் செய்திருக்காங்க... இரண்டு மாதங்களுக்கு அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக ஆம்ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்தும் அவர் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்கா லம்பா சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து ஏதும் வெளியிடப்படவில்லை.
அப்படி என்னதாங்க செய்தாங்க... காரணம் சொன்னா ஒரு லாஜிக்கா இருக்கும்... காரணம் சொல்லாமலே சஸ்பெண்ட் செய்தா எப்படிங்க?