மும்பை:
இப்போ நான் செம ஹேப்பி மச்சி... என்று ஓப்பன் டாக் விட்டுள்ளார் எமிஜாக்சன். இவரது மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்று தெரியுங்களா?
இவர் வெளிநாட்டு நடிகையாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு என்று தன் திறமையை காட்டி வந்தார் எமிஜாக்சன். தற்போது ரஜினியுடன் 2.0 படத்திலும், இந்தியில் அலி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படங்களுக்கு பிறகு இவர் தொடர்ந்து தனது சொந்த மொழியான ஆங்கிலத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இதுதான் இப்போது இவரது ஹேப்பிக்கு காரணமாம். இதுகுறித்து இவர் கூறுகையில், எனது தாய்மொழியான ஆங்கிலத்தில் இரண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். இது என்னுடைய நீண்ட நாள் கனவு என்று கூறியுள்ளார்.