ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவது என்பது கண்டிப்பாக ஒவ்வொரு வீரரின் மிகப் பெரிய லட்சிய கனவாக இருக்கும். அதேபோல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பரபரப்பாக நடக்கும் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது என்பது, ஒரு நாட்டுக்கு கிடைக்கும் ஒரு மிகப் பெரிய கவுரமாகும். சாதாரணமாக ஒலிம்பிக் போட்டியை எந்த நாட்டில் நடத்துவது என்பது, கிட்டத்தட்ட, 8 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்யப்படுகிறது.

இந்த போட்டிகளை
நடத்துவதற்கு ஒரு
நாட்டில் தகுந்த தேவையான
வசதிகள் உள்ளதா,
வீரர்களுக்கு நல்ல பாதுகாப்பு
உள்ளதா என
பல்வேறு கோணங்களில்
அலசி ஆராய்ந்து
தான் போட்டியை
நடத்தும் அரிய வாய்ப்பு
தரப்படுகிறது.
கடைசியாக, 2016ல்,
பிரேசில் நாட்டின்
ரியோ டி
ஜெனிரோவில் ஒலிம்பிக்
போட்டி விமர்சியாக நடந்தது.

அடுத்தது, 2020ல்
டோக்கியோவில் நடக்க
உள்ளது. ஒலிம்பிக்
போட்டியை ரியோவில்
நடத்துவதற்கு, ஒலிம்பிக்
அதிகாரிகளுக்கு பெரிய தொகை லஞ்சம்
கொடுக்கப்பட்டதாக தற்போது
தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச தடகள
சம்மேளனத்தின் முன்னாள்
தலைவர் லாமினே
டியாக்குக்கு, 13 கோடி
ரூபாய் லஞ்சமாக
அளித்துள்ளதாக ரியோ
நகரின் முன்னாள்
கவர்னர் செர்ஜியோ
கேப்ராலிடம் பிரேசில்
அரசு தற்சமையம் விசாரணை
நடத்தி வருகிறது.
பிரான்ஸ் நாடு
நடத்தி வரும்
விசாரணையின் அடிப்படையில்
இந்த விசாரணையை
பிரேசில் நாடு துவக்கியுள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel