பெங்களூரு:
ஆற்றில் மீன்பிடிச்சு பார்ததிருப்பீங்க... கடலில் ஏன் குளத்தில் மீன் பிடிச்சுக்கூட பார்த்திருப்பீங்க... ஆனால் ரோட்டில் மீன்பிடிச்சு பார்த்திருக்கீங்களா? இது பெங்களூரில் நடந்துள்ளது. 


பெங்களூரில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில்தான் சிலர் வலை விரித்து மீன்பிடித்து கொண்டிருகின்றனர். எப்படிங்க சாலையில் ஓடும் தண்ணீரில் மீன் வரும் என்று கேட்கிறீர்களா? வருதே... எப்படி? இப்படிதான்.


 பெங்களூரில் பெய்த கனமழையால் பொம்மனஹள்ளி உள்ளிட்ட சில பகுதிகள் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏரி நிரம்பி வழிவதால் அதில் இருந்த மீன்கள் சாலைக்கு வர, அதைதான் அந்த பகுதி இளைஞர்கள் வலை விரித்து பிடித்தனர். இதை வீடியோவாக எடுத்தவர்கள் இணையத்தில் பதிவேற்ற அப்புறம் என்ன அதுதான் தற்போது வைரலாகி வருகிறது.


Find out more: