மே 23 ஆம் தேதி  வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, விடிவுகாலம் பிறக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.   உலகம் முழுவதும் இன்று தொழிலாளர்கள்  தினம் கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மேதினப் பேரணியில்  தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். 



அண்ணா நகரில் தொடங்கிய  பேரணி முக்கிய சாலைகள் வழியாகச்  சிதம்பர நகர் மைதானத்தில் முடிந்தது.  திமுக எம்.பி. கனிமொழி  சிவப்பு புடவை அணிந்து  மே தின பேரணியில் பங்கேற்றார்.



பேரணியை  மு.க.ஸ்டாலின் உரையாற்றி நாட்டின்  தொழிலாளர் உரிமைகள்  கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடகு வைக்கப்பட்டுள்ளது என்றார். மத்திய, மாநில அரசுகளால் தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்படுகின்றன,  மே 23 ஆம் தேதி  வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, விடிவுகாலம் வரும் எனவும், திமுக தான் தொழிலாளர்களுக்கு காவலாளி, மோடி அல்ல என்று தெரிவித்தார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: