சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண்ணை வாலிபர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு பகுதியை சேர்ந்த தேன்மொழி சென்னையில் தட்டச்சு பணி செய்து வருகிறார்.

Image result for காதலியை அரிவாளால் வெட்டிய இளைஞர்!

மகளிர் விடுதியில் தங்கி வேலை பார்த்து வரும் இவரை சுரேந்தர் என்பவர் சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். முதலில் காதலுக்கு சம்மதம் தெரிவித்த தேன்மொழி, பெற்றோர்கள் சம்மதிக்காததால், சுரேந்திரனிடம் பழகுவதை குறைத்துள்ளார்.

 


இந்நிலையில் வேலை முடிந்து ரயில் நிலையத்தில் மகளிர் விடுதிக்கு செல்ல தேன்மொழி காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சுரேந்தர் தேன்மொழியை சந்தித்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென சுரேந்தர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தேன்மொழியை வெட்டினார். அந்த பக்கமாக வந்த ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ரயில்வே போலீசார் இருவரையும் மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 


Find out more: