பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிகவும் அவசியம். அதனால் தான் மருத்துவர்கள் உணவில் அதிக அளவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். கண் திறனை பாதுகாக்கும் காய்க்கறிகள் என்னென்ன என்பதை நாம் இப்போது பார்க்கலாம்..


பச்சை நிறத்தில் இருக்கும் காய்கறிகள் அனைத்துமே, கண் பார்வைக்கு மிகவும் நல்லது. இந்த காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. அதனால் கண் பார்வை குறைப்பாடு உள்ளவர்கள் பச்சை நிற காய்கறிகளை, அதிகளவில் உணவில் சேர்த்து கொள்ளலாம். 


தினமும் மதிய உணவில், ஒரு வகை கீரை சேர்த்துக் கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. கீரைகளில் இரும்பு சத்து, வைட்டமின் B12, போலிக் ஆசிட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. எனவே கீரைகளுக்கு, உடல் நலத்தை காப்பதில் முக்கிய பங்கு உண்டு. 


காய்கறி சாலட் உடன் எலுமிச்சை  சேர்த்து உண்டால்,  நம் பார்வை கூர்மையாகும்.


தக்காளி, கேரட், பப்பாளி  ஆகியவை கண்ணுக்கு மிகவும் நல்லது. மாமிசங்களில் இருக்கும் சத்துக்கள் காய்கறிகளிலும் உண்டு. அதனால் உணவில் காய்கறிகள் சேர்த்துக் கொள்வது, நம் உடலுக்கு மிகவும் நல்லது.


మరింత సమాచారం తెలుసుకోండి: