சென்னை:
கபாலி படத்தில் வரும் பாடலை வரியை படத்தின் தலைப்பாக வைத்து முதல் தயாரிப்பை தொடக்கி விக்ரம் பிரபுவின் படம் கிடுகிடுவென வளர்ந்து வருகிறதாம்.


‘கபாலி’ படத்தின் பாடல் தலைப்பான ‘நெருப்புடா’ என்ற தலைப்பை தனது அடுத்த படத்தின் தலைப்பாக வைத்து படம் தயாரிக்கிறார் விக்ரம் பிரபு. இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் சிவாஜியின் அன்னை இல்லத்தில் கோலாகலமாக நடந்தது.


‘நெருப்புடா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. தலைப்புக்கு ஏற்றபடி கிடுகிடுவென நடந்து வருகிறதாம் படம். இப்படத்தில் விக்ரம் பிரபு தீயணைப்பு வீரராகவும் ரஜினி ரசிகராகவும் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு ஜோடி நிக்கி கல்ராணி. தலைப்புக்கு தகுந்த மாதிரி படமும் இருக்கும்னு சொல்லுங்க.



మరింత సమాచారం తెలుసుకోండి: