பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி, அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆப் வாசேபூர், பத்லாபூர் மற்றும் ஜாலி எல்எல்பி 2 போன்ற பல படங்களின் மூலம் புகழ் பெற்றவர் ஆவார். நடிப்பில் வியக்க வைக்க வேண்டுமா, அதிரடி கவர்ச்சி காட்ட வேண்டுமா, எதுவானாலும் ஓகே, என்று இறங்கி அடிப்பவர் ஹுமா.


Image result for huma qureshi hot


இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் அறிமுகம் ஆகியிருக்க வேண்டியது. ஆம், தல அஜீத் நடித்த பில்லா 2 படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக இவரை தான் முதலில் கேட்டனர். ஆனால் இவரால் நடிக்க முடியாமல் போகவே தான் அந்த வேடத்தில் பார்வதி ஓமனக்குட்டன் நடித்தார். இப்பொழுது ஐந்து ஆண்டுகள் கழித்து தமிழில் அறிமுகமாக இருக்கிறார். அதுவும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக.


Image result for huma qureshi hot


 இது நடக்கவிருப்பது பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாக இருக்கும் காலா படத்தில் தான். காலா படத்தில் சூப்பர்ஸ்டாரின் ஜோடியாக சரினா என்ற வேடத்தில் நடிக்கிறார் ஹுமா குரேஷி. நாற்பத்தி ஐந்து வயதான குப்பத்து பிள்ளைகளுக்கு உதவி செய்யும் ஒரு தன்னார்வலராக நடித்திருக்கும் ஹுமா, காலா படத்தின் பிளாஷ்பேக் பகுதிகளில் ரஜினியின் காதலியாக வருகிறார். இவர்கள் இடையே பல காதல் காட்சிகளும், ஒரு ரொமான்டிக் பாடலும் உள்ளது என்று கூறப்படுகிறது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: