அம்மா ரோலில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமான இந்த நடிகை, ஒரு கட்டத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்து, ஒரு சில திரைப்படங்களை இயக்கி வந்தார். அதன் பிறகு, பிரபல தனியார் சேனல் ஒன்றில், ஒளிபரப்பப்படும் பஞ்சாயத்து நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.
இதில் இறங்கியதால், படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். ஆனால் தற்போது பஞ்சாயத்து நிகழ்ச்சியில், இவர் மவுஸ் குறைந்து போனதால், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளாராம்.
நல்ல கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து, அவர் நடிக்க முடிவு எடுத்துள்ளார். இதில் ஓரளவுக்கு படவாய்ப்புகள் கிடைத்ததும், பஞ்சாயத்தை கைவிட்டு விட்டு, தனது முழு நேரத்தையும் நடிப்பிற்க்கே ஒதுக்கப்போகிறாராம்.