கூந்தல்களை பராமரிப்பதற்கு தடையாக இருப்பது பொடுகு. பொடுகு வந்தால், முடி அதிகமாக கொட்டும். பொடுகை தடுப்பதற்கான எளிய மருந்தை இன்றைய அழகு குறிப்பு தகவலில் பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் : 
நல்லெண்ணெய் -50 ml
வெந்தயம் - அரை கப் 


அரை கப் வெந்தயத்தை இரவு படுக்கும் போது தண்ணீரில் ஊற வைத்து, காலையில் அதை மிக்சியில் நன்கு மையாக அரைத்து பேஸ்ட் பதத்திற்கு  கொண்டு வரவேண்டும். பின்பு தலை குளிப்பதற்கு 1 மணி நேரம் முன்பு, சுத்தமான 50 ml நல்லெண்ணையை எடுத்து,  தலை முடி மற்றும் மண்டையில், பொடுகு இருக்கும் இடங்களில், மசாஜ் செய்துக் கொள்ள வேண்டும். 


எண்ணெய் தலையில் நன்கு ஊறிய பின்பு, அரைத்த வெந்தயத்தை ஷாம்பூவிற்கு பதில் உபோயோகித்து, குளிர்ந்து நீரில்அலசினால், பொடுகு நீங்குவதோடு முடியும் சாப்டாக இருக்கும். இதை தொடர்ந்து நான்கு வாரங்கள் பின்பற்றி வந்தால், பொடுகு மறைந்துவிடும்.



మరింత సమాచారం తెలుసుకోండి: