சீயான் விக்ரம் பற்றிய ஒரு ரகசியத்தை தெரிவித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி. நடிகரும், ஆர்.ஜே. வுமான பாலாஜி தனது ரசிகர்களுடன் நேற்று ட்விட்டரில் உரையாடினார். ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் டான் டான் என்று பதில் அளித்தார்.

சினிமா, அரசியல் பற்றிய சுவாரஸ்சிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விபரம் வருமாறு, நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் பற்றி என்று கேட்ட ஒருவரிடம் அவர்களை சும்மா விடுங்களேன் என்று பதில் அளித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

சீயான் விக்ரம் பற்றி ரசிகர்களுக்கு இது வரை தெரியாத விஷயம் சொல்லுங்களேன் என்று ஒருவர் கேட்க, அவர் போன் செய்தால் அவர் நம்பர் தெரியாது பிரைவேட் நம்பர்னு மட்டும் தான் வரும். சீக்ரெட் ஓகேவா என்று நக்கலாக கேட்டுள்ளார் பாலாஜி.
click and follow Indiaherald WhatsApp channel