'மருது' திரைப்படத்திற்கு பிறகு விஷால் 'கத்தி சண்டை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூரஜ் இயக்கும் இந்த படத்தை 'மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால்' தயாரித்து வருகிறார். இதில் விஷால், தமன்னா, சூரி, வடிவேலு, ஜெகபதி பாபு உள்பட பலர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார்.


இதன் பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இன்னும் சில காட்சிகள் மட்டுமே படம்பிடிக்க இருக்கின்றன. இந்நிலையில் இந்த படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. 


இதுகுறித்த முறையான அறிவிப்புகளை, நாளை படக்குழுவினர் வெளியிடுகின்றனர். மேலும் இதுவரை விஷால் நடித்த திரைப்படங்களிலே, அதிக பொருட் செலவை கொண்டு உருவாகும் திரைப்படம், 'கத்தி சண்டை' தான் என்பது குறிப்பிடத்தக்கது.


మరింత సమాచారం తెలుసుకోండి: