'இது நம்ம ஆளு' திரைப்படத்திற்கு பிறகு ஆண்ட்ரியா, தனுஷ் நடிக்கும் 'வடசென்னை' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இதில் சமந்தா ஹீரோயினாக நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. 


அதன் பிறகு அவர் விலகியதும், அவருக்கு பதில் அமலா பால் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ள விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கவுள்ளாராம். 


இவர் நடிக்கவுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. இந்த படத்தில் ஆண்ட்ரியா, ஒரிஜினல் சென்னை பெண்ணாக நடிக்க போகிறாராம். தனது முழு நடிப்பு திறமையையும் அவர் இந்த படத்தில் காண்பிக்க உள்ளாராம்.


மேலும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: