சென்னை:
ஆரம்பத்தில் இருந்து அட்டகாசமாக நடை போட்டு வந்த சிவாஜியின் பேரனுக்கு இப்போது தொடர் தோல்விகளே கிடைத்து வருகிறது. இதிலிருந்து அவர் மீள "வீரசிவாஜி" கைக்கொடுக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


தொடர் வெற்றிகளை பெற்றுவந்த நடிகர் திலகம் சிவாஜியின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபுக்கு முதல் தோல்வியாக அமைந்தது ஏ.எல்.விஜய் இயக்கிய, இது என்ன மாயம் படம்.


அதிலிருந்து அவருக்கு இறங்கு முகமாகவே இருந்து வருகிறது. 


இதில் வாகா திரைப்படம் நல்ல ஓபனிங்கை பெற்றாலும் வலுவில்லாத கதை, திரைக்கதையால் வாய்யா... போகலாம் என்று தியேட்டரை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளது. இப்படி தோல்விகளையே சந்தித்து வரும் விக்ரம் பிரபுவுக்கு வரும் செப்டம்பர் 23 வெளியாக உள்ள "வீர சிவாஜி" படமாவது கைக்கொடுத்து தூக்கி விடுமா என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். பார்ப்போம்... வீரசிவாஜி... வெற்றி சிவாஜியாகுமா என்று...


Find out more: