கடைசியாக விஷால் நடிப்பில் வெளிவந்த 'மருது' திரைப்படத்தில், விஷாலின் அப்பத்தா-வாக நடித்த குளப்புள்ளி லீலா தற்போது நிறைய தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


'மருது' திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்ததால், இவரை தற்போது கோலிவுட் இயக்குனர்கள் சிலர் தங்கள் படத்திற்கு புக் செய்து வருகின்றனர். 


இவர் மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்கள் நடித்திருந்தாலும், தமிழில் 'மருது' திரைப்படத்தின் மூலம் தான் பிரபலமானார். இந்நிலையில் தற்போது நடிக்கவுள்ள திரைப்படங்களில் அம்மா, அண்ணி, அக்கா, பாட்டி உள்ளிட்ட வேடங்களில் நடிக்கவுள்ளாராம். 


கோலிவுட்டில் தற்போது நடித்து வரும் அம்மா நடிகைக்கு இவர் போட்டியாக உருவாகுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


మరింత సమాచారం తెలుసుకోండి: