சென்னை:
நம்பி வாங்க... என்று கூப்பிட்ட இந்த கூட்டணி மீண்டும் சேர்ந்து ஒரு படம் பண்ண போறாங்களாம்... எந்த கூட்டணி தெரியுதுங்களா?


வருத்தப்படாத வாலிபர் சங்கமாக ஆரம்பித்து ரஜினி முருகனாக பட்டையை கிளப்பி சிவகார்த்திகேயன் - இயக்குனர் பொன்ராம் கூட்டணிதான் அது. வசூலில் 2 படங்களும் பட்டையை கிளப்பியது அனைவரும் அறிந்தது.


இந்த கூட்டணி மீண்டும் சேர போவதாக அப்போதே தகவல் வந்தது. இப்ப இந்த படத்தை தயாரிக்கப் போறது ரெமோ படத்தை தயாரித்த ‘24AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் என்று இப்போது உண்மையாயிடுச்சு.


இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க இருக்காங்களாம். அதுக்கு முன்னாடி மோகன்ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: