சென்னை:
மிரட்டல்... செம மிரட்டல் என்று தன் சைத்தான் படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.
நடிக்க தொடங்கியதில் இருந்தே வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இவரது பிச்சைக்காரன் படம் தமிழ், தெலுங்கில் செம கலெக்சன் பார்த்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் தற்போது இவரது வித்தியாசமான நடிப்பில் வெளியாக உள்ள படம் சைத்தான்.
இப்படத்தின் டீசர் வீடியோ நேற்று வெளியானது. அமைதியான விஜய் ஆண்டனியா இது என்று பிரமிக்கத்தக்க வகையில் டீசர் செம மிரட்டலாக வந்துள்ளது.