திருவனந்தபுரம்:
ம்ஹீம்... ம்ஹீம்... இனிமே விட்டா சரியாகாது... முடிச்சு விட்டுட வேண்டியதுதான் என்று அரசே முடிவு செய்துவிட்டதாம். எதற்கு என்று தெரியுங்களா?


கேரளாவில் தெருவில் நடந்து செல்வோரை நாய்கள் கடித்துக் குதறி காயப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ஆபத்தான நாய்களை கொல்ல அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் பரபரக்கின்றன.


கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். திருவனந்தபுரம் அருகே சமீபத்தில் 65 வயது மூதாட்டி ஒருவரை தெரு நாய்கள் கடித்துக் குதறி கொன்றன. 


இப்படி மாநிலத்தின் பல பகுதிகளில் தெரு நாய்கள் அதிகமாக திரிவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதனால் ஆபத்தான தெரு நாய்களை பிடித்து அவற்றை கொல்ல அரசு திட்டமிட்டுள்ளதாம்.


இப்படி வெறிப்பிடித்த நாய்கள் மக்களை விரட்டி விரட்டி கடிப்பதால் பிரச்னைகள் அதிகரிப்பதால் ஆபத்தான நாய்களை பிடிக்க பயிற்சி பெற்ற ஆட்களை ஏற்பாடு செய்ய முதல்வர் மற்றும் அமைச்சர் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனராம்.



మరింత సమాచారం తెలుసుకోండి: