கோலிவுட்டின் நேற்றைய ஹீரோ நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் 'முத்துராமலிங்கம்' திரைப்படம் தற்போது உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. 


இந்நிலையில் கவுதம் கார்த்திக் அடுத்து ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'ஜெயம் கொண்டான்', 'கண்டேன் காதலை' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கவுள்ள புது திரைப்படத்தில் கவுதம் கார்த்திக் நடிக்க உள்ளார். 


இந்த படத்தை 'அபிரா பிரைவேட் லிமிடெட்' கம்பெனி சார்பில் ஆஷா ஸ்ரீ தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு பூஜை விழா இன்று சென்னையில் எளிய முறையில் நடைபெற்றது. இதில் கவுதம் கார்த்திக் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 12-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது.


மேலும் இந்த படத்தின் கதாநாயகி, தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: