'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படத்திற்கு பிறகு ஜிவி பிரகாஷ், ராஜேஷ் இயக்கத்தில் 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. 


இந்நிலையில் இவர் நடிப்பில் ஏற்கனவே உருவாகியுள்ள 'பிரூஸ்லி' திரைப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 


இந்த படத்தை வரும் செப்டம்பர் மாத இறுதியில், ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்களாம். தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர். 


மேலும் இந்த படத்தை பிரஷாந்த் பாண்டிராஜன் இயக்கியுள்ளார். கெனன்யா பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.கீர்த்தி கார்பண்டா, ஆனந்த் ராஜ், பாலசரவணன் ஆகியோரும் இந்த படத்தில் ஜீவியோடு இணைந்து நடித்துள்ளனர். 



మరింత సమాచారం తెలుసుకోండి: