புவனேஸ்வர்:
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி 30 பேர் வரை இறந்துள்ளதாக வெளிவந்துள்ளதாக வரும் தகவல்கள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளன.
ஒடிசாவில் பருவமழை தீவரமடைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையின் ஒடிசாவின் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 36 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவங்கள் மக்கள் மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.