ப்ளூவேல் கேமின் மூளையாக செயல்பட்டதாக ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுமியை போலீஸார் கைது செய்தனர். இவர்தான் டாஸ்க்குகளை எல்லாருக்கும் கொடுத்து வந்தவராம். ப்ளூவேல் எனப்படும் உயிரை குடிக்கும் ஆன்லைன் விளையாட்டானது தற்போது உலகமெங்கும் தற்சமையம் பிரபலமாகி வருகிறது.

என்னவென்றே தெரியாமல் இந்த விளையாட்டை விளையாடுவோர் இறுதியாக தங்கள் உயிரை வீணாய் மாய்த்து கொள்கின்றனர். மொத்தம் 50 நாள்கள் இந்த விளையாட்டை ஆன்லைனில் விளையாட வேண்டும்.

அவ்வாறு விளையாடும் போது கையில் பிளேடால் நன்கு கிழித்து திமிங்கலம் வரைவது, சுடுகாட்டுக்கு செல்ல வைப்பது, திகில் படங்களை பார்க்க வைப்பது உள்ளிட்ட மனதை கலக்கும்படி பாதிக்கும்படி செய்கின்றனர்.இதுபோன்ற பயம் கலந்த,மிரட்டல் கலந்து டாஸ்குகளை செய்து செய்து பயத்தால் இறுதியில் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர். தற்போது நாட்டையே உலுக்கி வரும் இந்த கேமின் அட்மினை ரஷ்ய போலீஸார் கைது செய்துள்ளனர்.
click and follow Indiaherald WhatsApp channel