சென்னை:
ரகசியத்தை போட்டு உடைத்துவிட்டார் இந்த நடிகை... இதனால் படக்குழு செம டென்ஷனில் இருக்கிறதாம்.


இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் காத்து வந்த ரகசியம் அதில் நடித்து வரும் நடிகையால் பூசணிக்காய் உடைத்தது போல் உடைந்துள்ளது. என்ன விஷயம் என்றால்...


இந்த படத்தில் 50 சதவீத நடிகர், நடிகைகள் மலையாள சினிமாவை சேர்ந்தவர்களாம். காரணம் தெறி கேரளாவில் பெற்ற வெற்றியை மனதில் வைத்து விஜய் இந்த முடிவை எடுத்திருந்தாராம். இந்த விஷயம் இதுவரை வெளியில் தெரியாமல் இருந்து வந்தது. இப்போது இந்த படத்தில் நடித்து வரும் அபர்ணா வினோத் இதை உடைத்து விட்டார் எப்படி தெரியுங்களா? இது தமிழ் படமா? இல்லை மலையாள படமா என்றே தெரியவில்லை.


அந்த அளவிற்கு மலையாளிகளே இப்படத்தில் அதிகம் நடித்து வருகின்றனர் என்று சொல்ல.... ரகசியம் புஸ்ஸாகி விட்டது. இதனால் படக்குழு செம டென்ஷனாம்... டென்ஷனாம்...


మరింత సమాచారం తెలుసుకోండి: