'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படத்தை அடுத்து ஜிவி பிரகாஷ் நடிப்பில் 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படம் வெளிவரவுள்ளது. இந்த படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். இதில் கயல் ஆனந்தி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் நாயகியாக நடித்துள்ளனர். 


இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்து, தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள இந்த  படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது. 


வரும் தீபாவளி பண்டிகை அன்று இப்படம் ரிலீஸ் ஆக்கவுள்ளது. ஏற்கனவே, கார்த்தியின் காஷ்மோரா, கத்திச்சண்டை, கொடி ஆகிய திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளிவரவுள்ள நிலையில் தற்போது ஜீவியின் கடவுள் இருக்கான் குமாரு திரைப்படமும், தீபாவளி பந்தயத்தில் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: