சென்னை:
டார்லிங்... டார்லிங்... டார்லிங்... அட படத்து தலைப்பு இல்லீங்க... அவரை இவரு இப்படிதான் அழைப்பாராம்.


யார்... யார் அழைப்பார்கள் என்று தெரியுங்களா? தெறி படத்தை அடுத்து இயக்கினால் தல அல்லது தளபதியை தான் இயக்குவேன் என்று பிடிவாதமாக ஒற்றை இல்ல அந்தரத்தில்தான் நின்றார் அட்லீ.


அஜீத்தை வைத்து படம் எடுக்க செய்த முயற்சி பலன் அளிக்கவில்லை.


தற்போது இவர் மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க உள்ளார். இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறதாம்.


அட்லீயின் முதல் படமான ராஜா ராணியில் நயன்தாராதான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இருந்தே அவர் நயன்தாராவை செல்லமாக டார்லிங் என்று தான் அழைப்பாராம். 


அந்தளவுக்கு நட்பு... அதனால் தற்போது டார்லிங்கிடம் விஜய் படத்தில் நடிக்க பேச்சு நடத்துவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும் என்று தெரிகிறது. 



మరింత సమాచారం తెలుసుకోండి: