சென்னை:
சமீபகாலமாக சூப்பர் ஸ்டாரின் பாடல் வரிகள், பஞ்ச் டயலாக் ஆகியவை படங்களின் தலைப்பாக மாறி வருகின்றன. அந்த வகையில் உதயநிதி நடிக்கும் படத்தின் தலைப்பு என்ன தெரியுங்களா?


சூப்பர்ஸ்டாரின் மிக பிரபலமான பாடல் வரிதாங்க அது. தற்போது அறிமுக இயக்குனர் தளபதி இயக்கத்தில் உதயநிதி நடிக்க உள்ள படத்திற்குதான் "பொதுவாக என் மனசு தங்கம்" என்று பெயரிட்டுள்ளனர்.


இது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ரஜினிகாந்தின் முரட்டுக்காளை படத்தில் வரும் பாடலின் முதல் வரி. ஏற்கனவே கபாலி படத்தின் நெருப்புடா பாடல் வரியை தன் படத்திற்கு சொந்தமாக்கிவிட்டார் விக்ரம் பிரபு. இப்போ உதயநிதி அந்த வரிசையில் சேர்ந்துள்ளார்.


தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தில், ஒரு நாள் கூத்து நிவேதா நாயகியாக நடிக்க, காமெடியனாக சூரி நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை தேனியில் நடந்தது.



మరింత సమాచారం తెలుసుకోండి: