இயக்குனரும், நடன இயக்குனரும், நடிகருமான பிரபு தேவா தற்போது திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். இவர் தயாரிப்பில் தற்போது இருதிரைப்படங்கள் உருவாகியுள்ளன. 


ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இவர் நடித்து, தயாரித்துள்ள 'தேவி'  மற்றும் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'போகன்' ஆகிய இறுதிரைப்படங்களையும் இவர் தயாரித்துள்ளார். 


இந்நிலையில் அண்மையில், தேவி திரைப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரபு தேவா, வரும் டிசம்பர் மாதம் 'போகன்' வெளிவரும், ரிலீஸ் தேதியை படக்குழுவினரோடு கலந்தாய்வு செய்துவிட்டு கூறுவோம் என அறிவித்துள்ளார். 


மேலும் லக்ஷ்மன் இயக்கிய இந்த படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் ஸ்வாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது பின்தயாரிப்பு பணிகள் நடைபெறு வருகின்றன.


మరింత సమాచారం తెలుసుకోండి: