சுவிட்சர்லாந்து:
நான் யாரு... நான் யாரு... நான் காட்டுறேன் பாரு... என்று ஆல்ப்ஸ் மலையில் வழி தெரியாமல் சிக்கித் தவித்த சுற்றுலாப்பயணியை பூனை ஒன்று பாதுகாப்பாக வழிகாட்டி விடுதிக்கு கொண்டு சேர்த்துள்ளது. அட உண்மைதாங்க... உண்மையிலும் உண்மைதாங்க... விஷயத்தை பாருங்க...


சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் வழி தெரியாமல் சிக்கித் தவித்தார் ஒரு சுற்றுலா பயணி. இவருக்கு பூனை ஒன்று வழிகாட்டி, பாதுகாப்பாக விடுதிக்கு கொண்டு சேர்த்துள்ளது. இதுதான் தற்போது டாக் ஆப் சுவிட்சர்லாந்து ஆகும்.


 இதுகுறித்து அந்த பயணியே என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க... 


 ஜிம்மல்வேல்டு  கிராமத்திற்கு அருகே உள்ள மலையில் சென்று கொண்டிருந்தேன். ஆனால் கீழே இறங்கும் வழி மறந்துபோயிடுச்சு. வழியை வரைப்படத்தில் தேடி கொண்டிருந்தேன். 


 ஆனால் வரைப்படத்தில் இருந்த வழி மூடப்பட்டு இருந்தது. அப்போதுதான் அந்த ஆச்சரியம் நடந்துச்சுங்க.. வெள்ளை மற்றும் கருப்பு நிறத்துடன் ஒரு பூனை, என்னை ஒரு பாதையில் வழிநடத்தி என்னை ஒரு பாதுகாப்பாக விடுதிக்கு கொண்டு சேர்த்தது. அதுமட்டுமா... அடிக்கடி பின்னால் திரும்பி... திரும்பி பார்த்துக்கொண்டே நான் வருகிறேனா என்று பார்த்தபடி சென்றது என்று சொல்லியிருக்கார். மனிதருக்கே தெரியாத வழியை... பூனை காட்டியுள்ளதே என்பதுதான் டாக் ஆப் டவுனாக இருக்கு.



మరింత సమాచారం తెలుసుకోండి: